செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:34 IST)

புதிய நியூஸ் சேனல்? விஜய் தரப்பு விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் 'லியோ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
 

இப்படத்தை அடுத்து, ‘விஜய்68’ படத்தின் டெஸ்ட் ஸூட்டிற்காக நடிகர் விஜய், வெங்கட்பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர்  இன்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சினிமாவில்  நடிப்பதுடன்  மக்கள் சேவையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி, சமீபத்தில், கல்வி விழா நடத்தினார். அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இலவச கல்வி பயிலகம் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதையடுத்து, இலவச சட்ட ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்படும் என்று விஜய் அனுமதியுடன் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய் பிரபல நியூஸ் சேனல் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் இணையதளங்களில் வெளியானது. .

அதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நிகழ்ச்சியில் அவரது ‘மக்கள் இயக்க’ யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கிராமங்களுக்கும் இது சென்று சேர விஜய்   நியூஸ் சேனல் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் வரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த சேனல் செயல்பட வாய்ப்புள்ளதாகக்’ கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பு இதை மறுத்து, அந்த தகவல் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.