1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (18:49 IST)

''என் பேவரெட் இயக்குனர் இவர் தான் ''-விஜய் மகன் சஞ்சய்

vijay- sanjay
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தனது பேவரெட் இயக்குனர் பற்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், சமீபத்தில் ’டிரிக்கர்’ என்ற  குறும்படம் இயக்கினார்.

இதையடுத்து,  நடிகர் விஜய்யின் மகன்   சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இயக்குனராக. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாவது பற்றி  சஞ்சய் ‘’லைகா நிறுவனத்திற்கு என் கதை பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தை இயக்குவதற்கு லைகா நிறுவனம் எனக்கு முழு சுதந்திரம் தந்துள்ளது.  இப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிட,  நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் நடனமாடும் ஒரு  பாடல் காட்சியை தன் டுவிட்டர் பக்கத்தில்  பகிர்ந்து, ரிபீட் மோடில் கேட்பதாக பதிவிட்டு, ’என் பேவரெட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்’ என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில்  'லியோ' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.