செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (17:05 IST)

ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்.. என்ன காரணம்?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2018ல் இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29.50 லட்சம் ஏ.ஆர்.ரஹ்மான் முன்பணம் பெற்றதாகவும், ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
 
இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சிக்கான முன் தொகையை திருப்பி கேட்டதாகவும், அதனை  தரவில்லை எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் பெயரில் இன்னொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva