வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (13:46 IST)

அரசு நிலத்தை அபகரித்த விவகாரம்.. அதிமுக எம்.எல்.ஏ. மீது நடவடைக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு..!

அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நில உரிமை மாற்றம் அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா? அரசியல்வாதிகள், அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சட்டவிரோதமாக குடியிருப்போரை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி, நவம்பர் 4ல் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran