திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (11:36 IST)

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி திடீர் நிறுத்தம்! காரணம் என்ன தெரியுமா?

விஜய் டிவி பிரமாண்டமாக இன்று நடத்தவிருந்த 'விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் விஜய் டிவி எடுத்த முடிவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
 
விஜய் டிவி சினிமா விருதுகள் இன்று சென்னை நேரு அரங்கத்தில் நடத்த திட்டமிடபட்டுள்ள் அதற்காக பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டது. மேலும் வண்ணமயமான லைட்டுகள் அமைக்கப்பட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்தது.
 
இந்த நிலையில் இந்த விழாவை ரத்து செய்வதாக விஜய் டிவி நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது. சமீபத்தில் தூத்துகுடியில் நடந்த காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாப உயிர்ழந்த நிலையில் இந்த விழாவை ரத்து செய்வதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. மேலும் இந்த விழா பின்னொரு நாளில் நடத்தப்படுமா? என்பது குறித்த தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை
 
இருப்பினும் தமிழர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து தமிழகமே துக்கத்தில் உள்ள நிலையில் ஒரு ஆடம்பர விழாவை நடத்தாமல் விஜய்டிவி நிர்வாகம் தவிர்த்ததை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.