திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (18:15 IST)

உன் கழுத்தை திருகி எறிந்துவிடுவேன்… யுவ்ராஜை கொம்பு சீவிவிட்ட பிளிண்டாஃப்!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் யுவ்ராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு மைதானத்தையே வாய்பிளக்க வைத்தார். அந்த ஓவருக்கு முன்பாக பிளிண்டாப் வீசிய ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்தார். அதனால் கோபமான பிளிண்டாப் யுவ்ராஜை முறைக்க, பதிலுக்கு யுவ்ராஜும் முறைத்தார்.

அப்போது யுவ்ராஜ் அருகில் வந்த பிளிண்டாப் ‘உன் கழுத்தை திருகி எறிந்துவிடுவேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த யுவ்ராஜ் ‘என் பேட் எந்த திசையெல்லாம் செல்லும் என்பது உங்களுக்கு தெரியும்’ எனக் கூறியுள்ளார். பிளிண்டாப் உடனான அந்த காரமான உரையாடலுக்கு பின்னரே வெறிகொண்ட வேங்கையாக யுவி அந்த சாதனை சிக்ஸர்களை விளாசினார். இதை சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் யுவ்ராஜ் சிங்கே பகிர்ந்துகொண்டுள்ளார்.