திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (17:40 IST)

கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த ஜடேஜா: ஒரே ஓவரில் 37 ரன்கள்

கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த ஜடேஜா: ஒரே ஓவரில் 37 ரன்கள்
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 20 ஓவரில் விஸ்வரூபம் எடுத்த ஜடேஜா அந்த ஓவரில் 37 ரன்கள் எடுத்ததால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான டுபிளஸ்சிஸ் அரைசதம் அடித்தார். ருத்ராஜ் 33 ரன்கள் அடித்தார் 
 
இதனையடுத்து களமிறங்கிய ஜடேஜா ஆரம்பத்தில் நிதானமாக விளைந்தாலும் கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். ஹர்ஷல் பட்டேல் வீசிய ஓவரில் 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு இரண்டு ரன்கள் எடுத்தார் என்பதும் அந்த ஓவரில் ஒரு நோபால் வீசப்பட்டதால் 20 ஆவது ஓவரில் மட்டும் மொத்தம் 37 ரன்கள் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஜடேஜா 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் அவர் தான் ஆட்டநாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணி 192 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது