ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (18:23 IST)

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய லீக் போட்டியில், நியூசிலாந்தை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 228 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சோஃபி டெவைன்93 ரன்கள் எடுத்தார். 
 
பின்னர் 229 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டும், கேப்டன் சூன் லஸ்ஸும் பொறுப்புடன் விளையாடினர்.
 
இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டை  பறிகொடுத்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ஆனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு, கடைசி ஓவரின் 3வது பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது