1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (10:23 IST)

சென்னைக்கு வந்தது விசில் போடு எக்ஸ்பிரஸ்: சிஎஸ்கே கவனிப்பால் திக்குமுக்காடிய ரசிகர்கள்..!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை காண சிஎஸ்கே நிர்வாகம் கன்னியாகுமாரியிலிருந்து சென்னைக்கு விசில் போடு என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரசிகர்களை அழைத்து வந்துள்ளது. இந்த ரயிலில் வந்த ரசிகர்களை சிஎஸ்கே கவனித்த விதத்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயினர்.
 
இந்த போட்டியை காண்பதற்காக 750 ரசிகர்கள் கொண்ட விசில் போடு எக்ஸ்பிரஸ் இன்று காலை சென்னை வந்தடைந்தது. நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ரசிகர்களின் பயணச் செலவு உணவு தங்குமிடம் சிஎஸ்கே டீ சர்ட் உள்ளிட்ட அனைத்தையும் சென்னை அணி நிர்வாகம் ஏற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த ரயிலில் வந்த ரசிகர்கள் விசில் அடித்து சிஎஸ்கே குறித்த கரகோஷத்தையும் எழுப்பி வந்தனர். இந்த 750 ரசிகர்களும் இன்று சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva