செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (07:34 IST)

சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்! என்ன காரணம்?

Chennai Train
சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான ரயில் பாதையில் வேலை நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
நாளை பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
மேலும் பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு - கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி நாளை மே தினத்தை ஒட்டி, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Siva