1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 மே 2022 (09:18 IST)

சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆகாதா? விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி

vishwanathan
சென்னையில் நடைபெறவிருக்கும் ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்தியாவை விட அமெரிக்கா தான் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக விஸ்வநாதன் ஆனந்த் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக சமீபத்தில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பேட்டியளித்த விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது:
 
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்க பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு அணிகளும் வலுவாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா மிக நன்றாக விளையாடினால் பட்டம் வெல்ல கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.