செஸ் ஒலிம்பியாட் போட்டி; இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல் சாம்பியன்!
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு இஸ்ரேலிய செஸ் சாம்பியன் பயிற்சி அளிக்க உள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த போட்டியில் பல நாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டி ஜூலை 28 தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய செஸ் வீரர்களும் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு பயிற்சி மே 8ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய செஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இஸ்ரேலிய செஸ் விளையாட்டு வீரரும், 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்றவருமான போரிஸ் கெல்ஃபண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.