வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (08:51 IST)

இந்தியா-மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட்: கோஹ்லிக்கு காத்திருக்கும் 2 சாதனைகள்!

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை கைப்பற்றிய நிலையில் இன்று முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி நார்த்சவுண்ட் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
 
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ரஹானே, மயாங்க் அகர்வால், ரோஹித் சர்மா, ஜடேஜா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், பும்ரா, அஸ்வின், புஜாரே, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சஹா, ஷமி ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது
 
அதேபோல் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மே.இ.தீவுகள் அணியில் கேம்பல், ஷாய் ஹோப், சேஸ், டோவ்ரிச், பிராவோ, புரூக்ஸ், பிரெத்வெயிட், புரூக்ஸ், ஹெட்மயர், கேப்ரியல், கார்ன்வால் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது
 
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் இரண்டு சாதனைகள் செய்ய வாய்ப்பு உள்ளது. ஒன்று இந்த டெஸ்டில் விராத் கோலி சதம் அடித்தால், கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார். அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டனான தோனியின் சாதனையை சமன் செய்வார். இந்த இரண்டு சாதனைகளையும் விராத் கோஹ்லி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்