ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (09:50 IST)

தங்கம் வென்ற வீராங்கனை ஒரு ஆண்! வெளியான மருத்துவ ரிப்போர்ட்! - பதக்கத்தை திரும்ப பெறுமா ஒலிம்பிக்ஸ் கமிட்டி?

Paris Olympics

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிப் ஒரு பெண்ணே இல்லை, ஆண் என்று வெளியாகியுள்ள மருத்துவ ரிப்போர்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீபமாக பாலின மாறுபாடு குறித்த பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இயற்கையாக க்ரோமோசோம்கள் மாறுவது தவிர்த்து சிலர் மருத்துவ முறையில் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்வதும், இவர்களை எப்படி அடையாளப்படுத்துவது என்பதும் சர்வதேச அளவில் குழப்பதிற்குரியதாக மாறி வருகிறது.

 

கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிப் கலந்து கொண்டார். பிறப்பால் ஆணாக இருந்த இவர் குரோமோசோம் மாற்றத்தால் பெண்ணாக மாறியதாக கூறினார். முன்னதாக உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இவர் கலந்து கொள்ள முயன்றபோது பாலின தகுதிச் சோதனையில் தோல்வி அடைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 

ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட இவர் பல நாட்டு வீராங்கனைகளையும் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார். ஆனால் அவரை பெண்கள் பிரிவில் கலந்து விளையாட அனுமதித்திருக்க கூடாது என கண்டன குரல்கள் பெரிதாக எழுந்தது.
 

 

இந்நிலையில் ஒரு பிரெஞ்சு பத்திரிக்கையாளர், இமானே கெலீப் ஒரு பெண்ணே கிடையாது என அவரது மருத்துவ ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளார். பொதுவாக ஆண்களுக்கு XY க்ரோமோசோம்களும், பெண்களுக்கு XX க்ரோமோசோம்களும் இருக்கும். இமானே கெலீப்பின் மருத்துவ ரிப்போர்ட் படி அவருக்கு XY க்ரோமோசோம் அதாவது ஆண்களுக்கான க்ரோமோசோம்தான் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

 

மேலும் அவருக்கு 5 ஆல்பா ரிடக்டேஸ் இன்சஃபிசியன்ஸி (5 alpha reductase insufficiency) என்ற குறைபாடு உள்ளது. இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மீசை, தாடி வளராது. அதை வைத்துக் கொண்டு இமானெ கெலீப் தன்னை பெண் என்று சொல்லி ஏமாற்றி ஒலிம்பிக்ஸில் பெண்கள் பிரிவில் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கத்தை ஒலிம்பிக்ஸ் கமிட்டி திரும்ப பெற வேண்டும் எனவும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

 

Edit by Prasanth.K