1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2024 (10:12 IST)

IPL Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக துட்டு உள்ள அணி இதுதான்.. RTM கை கொடுக்குமா?

IPL Mega auction 2024

IPL Mega Auction live updates: ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஆக்‌ஷன் இன்று நடைபெறும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறும் நிலையில் எந்த வீரர்களை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஐபிஎல்லில் 10 அணிகள் உள்ள நிலையில் எந்த அணியிடம் அதிக தொகை கையிருப்பு மற்றும் ஆர்டிஎம் உள்ளது என பார்க்கலாம்.

 

கையிருப்பு தொகையில் 110 கோடி ரூபாயுடன் பஞ்சாப் அணி முதல் இடத்தில் உள்ளது. அதனால் பஞ்சாப் அணி முக்கியமான பல வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆர்சிபி அணியிடம் 83 கோடியும், டெல்லி அணியிடம் 73 கோடியும் உள்ளது. லக்னோ மற்றும் குஜராத் அணிகளிடம் தலா 69 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸிடம் ரூ.55 கோடியும் உள்ளது.

 

கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் தலா ரூ.45 கோடி கையிருப்பு வைத்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.41 கோடியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
 

 

RTM (Right to Match Card) முறையில் ஒரு அணி தங்களது வீரர்களை தொடர்ந்து தக்க வைக்க முடியும் என்பதால் எந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

RTM முறையிலும் அதிகமான ஆர்டிஎம் கார்டுகள் பஞ்சாப் அணி வசமே உள்ளது. பஞ்சாப் அணியிடம் 4 RTM உள்ளது. ஆர்சிபியிடம் 3, டெல்லியிடம் 2 RTMகள் உள்ளன. இதுதவிர மும்பை, சன்ரைசர்ஸ், குஜராத், லக்னோ, சென்னை அணிகள் தலா ஒரு RTM கையிருப்பில் வைத்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் RTM கையிருப்பு இல்லை.

 

Edit by Prasanth.K