வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (08:59 IST)

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது தென் ஆப்பிரிக்கா ! – தொடரும் துயர வரலாறு !

தென் ஆப்பிரிக்கா நேற்று நியுசிலாந்திடம் தோற்றதை அடுத்து உலகக்கோப்பையில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை போன்ற சர்வதேசத் தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே ஹாட்ரிக் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருப் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

நேற்று நியுசிலாந்துக்கு எதிரானப்போட்டியில் வெற்றி பெற்றாலே அவர்களின் அரையிறுதி வாய்ப்பு தத்துபித்துதான் எனும் நிலையில் நேற்றும் தோல்வி அடைந்திருப்பதன் மூலம் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது. கடந்த 1992 முதல் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா இதுவரை ஒருமுறை பைனலுக்கு சென்றதில்லை. ஒவ்வொரு தொடரின் போதும் பலமான அணியாக உருவாகி வரும் தென் ஆப்பிரிக்கா எதாவது ஒரு காரணத்தால் சொதப்பி தோற்று வெளியேறும். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கிரிக்கெட் உலகில் சோக்கர்ஸ் எனும் பட்டப் பெயர் உண்டு. அந்த வரலாறு இந்த உலகக்கோப்பை போட்டியிலும் தொடர்கிறது.