வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:30 IST)

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… திருப்புமுனையை ஏற்படுத்திய ஷர்துல் தாக்கூர்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டிருந்த நிலையில் இப்போது 2 விக்கெட்கள் விழுந்துள்ளன.

ஜோகன்னஸ்பார்க் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ராகுல் 50 ரன்களும் அஸ்வின் 46 ரன்கள் எடுத்து உள்ளனர். இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்று ஒரு விக்கெட் இழந்தது. அதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் தொடர்ந்து ஆடிவந்தனர்.

இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கேப்டன் டீன் எல்கர் மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகிய இருவரின் விக்கெட்டையும் ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 102 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.