1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (14:15 IST)

சதமடித்தார் இந்திய கேப்டன்: 2வது ஒருநாள் தொடரில் இந்தியா அசத்தல்!!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. 
 
இதனையடுத்து ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வியை அடைந்தது. இந்நிலையில் வெற்றியை தக்கவைக்க கூடிய முக்கிய போட்டியான இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் ஷர்மா, தவான் அருமையான தொடக்கம் கொடுத்தனர். தவான் 67 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரோகித் ஷர்மாவுடன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். 
 
தற்போது ரோகித் ஷர்மா சதமடித்துள்ளார். இது அவருக்கு 16வது சதமாகும். ஷ்ரேயஸ் ஐயர் அரை சதத்தை கடந்து இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி 40.5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பெரிய இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.