வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (14:07 IST)

மேற்கிந்திய தீவுகள் அணியை கேலி செய்த ஹர்பஜன் சிங்கிற்கு எதிர்ப்பு...

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்  தொடரை 4 -1 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்த நடந்த ஆசிய கோப்பையில் வெற்றிவாகை சூடியது.
இந்நிலையில்  இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முன்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
 
முதல் டெஸ்டில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 வுக்கெட் இழப்பிற்கு  649 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடியசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய நியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.பின் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 வுக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்த மோசமான ஆட்டத்தை பற்றி கேலி செய்யும் விதமாக இந்திய அணியின் பந்து வீச்சாளரான ஹர்பதன் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது: 'மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முன் நான் ஒரு வினாவை முன்வைக்கிறேன். இந்த அணியை வைத்துக்கொண்டு உங்களால் ரஞ்சிக் கோப்பையின் அறையிறுதிவரையாவது செல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.’இவர் இப்படி பதிவிட்டது இந்திய அணி வீரர்களை கடுப்பேற்றியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் ஆஸ்த்திரேலிய வீரர் சைமன்ஸை தவறாக சித்தரித்து மைதானத்தில்  பேசியதால் ஐசிசி மற்றும் பிசிசிஐ போர்டால் எச்சரிக்கை செய்யப்பட்டு,  சில போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் அவரது பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.