14 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி: தென்னாப்பிரிக்கா போராடி தோல்வி!
14 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி: தென்னாப்பிரிக்கா போராடி தோல்வி!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது
இதனையடுத்து 186 என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.
இதனை அடுத்து 14 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 14 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva