வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (08:01 IST)

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்: பாகிஸ்தான் மிரட்டல்

2018ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலககோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும்னானால் விசா, உச்சக்கட்ட பாதுகாப்பு குறித்து இந்திய அரசு முழு உத்தரவாதம் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் போட்டியை புறக்கணிக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.



 
 
இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை தீவிரமாக நடந்து வருவதால் கிரிக்கெட் உள்பட எந்த போட்டியிலும் இந்தியாவில் பாகிஸ்தானும், பாகிஸ்தானில் இந்தியாவும் விளையாடவில்லை. ஆனால் இரு அணிகளும் வெளிநாட்டு மண்ணில் மோதி வருகின்றன.
 
இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் உலகக்கோபபை ஹாக்கி தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கான விசாக்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் என்றும் இல்லையெனில் தொடரை புறக்கணிக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் மிரட்டல் விடுத்துள்ளது.