கடைசி பந்தில் உலக சாதனையை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் டி20 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸ் அணியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் விளையாடி வருகிறார்.
செயிண்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 1 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அந்த 1 ரன்னும் அவர் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் எடுக்கப்பட்டது. அதுவும் இல்லையென்றால் அவர் உலக சாதனை படைத்திருப்பார்.