இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது
கடந்த 16ஆம் தேதி ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்தது
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் 218 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணிக்கு 342 என்ற இலக்கு வெற்றிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது
இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் மிக அபாரமாக விளையாட அப்துல் சபீக் என்பவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்