சுர்ருன்னு 'வெயில் அடிச்சாலும்’ விளையாடுங்கப்பா....இந்தியா - நியூஸிலாந்து வீரர்களுக்கு மேயர் அறிவுரை
நியூஸிலாந்து நாட்டில் உள்ள மெக்லியன் பார்க்கில் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது அப்போது அதிகளவு சூரிய ஒளியின் தாக்கம் இருந்ததால்...போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
இதுகுறித்து கருத்து அந்த நகரின் மேயர் கூறியதாவது :
சூரியஒளி அதிகமாக இருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறாமல் களத்தில் நின்று ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் அமபயர் சில விதிகள் காரணத்தால் 40 நிமிடங்கள் நிறுத்தி வைத்தனர். அதனால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நகரின் மேயர் பில் டால்டன் கூறியதாவது:
புறவிளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டில் கண்ணில் சூரியன் படுவதை சாக்காக கருதி இடைவேளை எடுக்ககூடாது. இது மைதானத்தில் விளையாடும் விளையாட்டு என்று தெரிவித்தார்.
அதாவது மழையால், போதிய வெளிச்சமின்மையால் போட்டி தடைபடுவதுண்டு, ஆனால் வெயில் வெளிச்சத்தால் போட்டி இடையில் தடைபடுவது இதுவே முதல்முறை என்று பலரும் கூறிவருகின்றனர்.