7 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோஹ்லிக்கு நேர்ந்த சோகம்
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 7 ஆண்டுகளுக்கு ஸ்டம்பிட் முறையில் அவுட்டானார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்பொது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் குவித்தது. இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 40வது ஓவரிலே இலக்கை எட்டி 8 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. தொடக்க வீரர் தவான் வெளியேறிய பின் களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியை பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
கோஹ்லி 75 ரன்கள் குவிந்திருந்த போது மொயின் அலி ஓவரில் ஸ்டம்பிட் முறையில் அவுட்டானர். இப்படி கோஹ்லி அவுட்டாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.