1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (19:41 IST)

கால்பந்து போட்டியை விட கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்கள்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று குரேஷிய, இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குரேஷிய அணி
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியை குரேஷிய மக்கள் பலர் அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டு பார்த்து ரசித்தனர். அலுவலகங்களிலும் தொலைக்காட்சியில் போட்டியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் போட்டி முடிவடைய ஒருசில நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது குரேஷிய நாட்டின் தீயணைப்புக்குழுவினர் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தீவிபத்து குறித்த தகவல் ஒன்று வந்தது. இதனையடுத்து உடனடியாக கால்பந்து போட்டியை விட கடமையே பெரியது என்று எண்ணி வீரர்கள் கிளம்பினர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ ஒன்று குரேஷியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. மேலும் கால்பந்து போட்டியை விட  கடமையை கண்ணாக நினைத்த குரேஷிய தீயணைப்பு வீர்ர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.