வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (08:45 IST)

தவான் மீண்டும் உலகக்கோப்பைக்கு வருவார் – கோஹ்லி சூசகம் !

காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய தொடக்க வீரர் ஷிகார் தவான் அரையிறுதிப் போட்டிகளுக்குள் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என இந்திய அணிக் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிகார் தவானுக்கு எதிர்பாராத விதமாக கைவிரலில் காயம் பட்டது. விரலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் மயிரிழை அளவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்துள்ளனர்.  இதனால் ஷிகார் தவான் உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டி வரை அவர் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. ஒருவேளைக் காயம் சரியாகப் பட்சத்தில் அவர் உலககோப்பையில் இருந்து விலக நேரிடும்.

இந்நிலையில் ஷிகார் தவானுக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு பிசிசிஐ- ஆல் அழைக்க்ப்பட்டுள்ளார். நேற்றையப் போட்டி மழையால் ரத்தானதை அடுத்து இந்திய கேப்டன் கோஹ்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் ‘ பாகிஸ்தான் போட்டிக்கு மனதளவில் தயாராக உள்ளோம். அங்கு சென்று திட்டத்தை செயல்படுத்துவதான் மீதி. ஆனால் வானிலை பீதியூட்டுவதாக உள்ளது. ஷிகார் தவான் இரண்டு வாரங்களுக்குக் கையில் கட்டுடன் இருப்பார். லீக் போட்டிகளின் இறுதி ஆட்டங்களுக்கும் அரையிறுதிப் போட்டிக்கும் அவர் அணியில் இருப்பார் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.