வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 ஜூன் 2018 (17:28 IST)

விராட் கோஹ்லி கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சி: கங்குலி

விராட் கோஹ்லி கவுண்ட்டி கிரிக்கெட்டில் பங்கேற்காதது எனக்கு மகிழ்ச்சியாக அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

 
அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த தொடருக்கு நடைபெறும் கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி காயம் காரணமாக விலகினார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
விராட் கோலி தலைசிறந்த வீரர். இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இங்கிலாந்து தொடருக்கு முன் அவர் கவுண்ட்டி போட்டியில் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கவுன்ட்டி போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், கடந்த முறை  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பயம் அவரிடம் இருந்ததாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.