Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- டிவில்லியர்ஸை பாராட்டிய கோலி

k
Last Modified வெள்ளி, 18 மே 2018 (15:12 IST)
ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களுரு அணி வென்றது. இந்த போட்டியில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது, ஸ்பைடர்மேன் போல் இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 218 ரன்கள் குவித்தது.
 
பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூர் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
 
இந்த போட்டியில் மோயீன் அலி வீசிய பந்தை ஹைதராபாத் அணியின் வீரர் அலெக்ஸ் ஹாலஸ் சிக்ஸருக்கு விரட்ட முயற்சி செய்தார். அப்போது எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பந்தை பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் குறித்து பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது:-
 
“ ஹாலஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ஸ்பைடர்மேன் போல் இருந்தது. சாதாரண மனிதர்களால் இதை செய்ய முடியாது” என்று கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :