செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:56 IST)

13 ஆண்டுகளை நிறைவு செய்த ரன் மெஷின் கோலி!

இந்திய அணியின் கேப்டன் கோலி சர்வதேசக் கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

19 வயது இளைஞனாக 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் கோலி இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்த கோலி இன்று 22000 ரன்களுக்கு சொந்தக்காரர். சர்வதேக் கிரிக்கெட்டில் மொத்தமாக 70 சதங்களை அடித்துள்ள கோலி ரன் மெஷின் என்றே வர்ணிக்கப்படுகிறார்.

துவண்டு கிடந்த இந்திய டெஸ்ட் அணியை இப்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மாற்றியுள்ளார். சர்வதேச தொடர்களில் கோப்பைகளை வெல்ல வில்லை என்பதே கோலி இப்போது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. கூடிய விரைவில் அந்த கரையை கோலி போக்குவார் என்று நம்புவோம்.