திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:17 IST)

ஒருநாள் தாமதமாக சுதந்திர தினப் பரிசு… வெற்றிக்குப் பின் கோலி!

இந்திய அணி நேற்று இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டை அபாரமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘எங்கள் அணி குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். போட்ட திட்டத்தின் படி விளையாடினோம். முதல் 3 நாட்களில் பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆனால் பூம்ராவும் ஷமியும் விளையாடியது அபாரம். ஒரு நாள் தாமதமானாலும் இதுதான் எங்கள் சுதந்திர தினப் பரிசு’ எனக் கூறியுள்ளார்.