வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (10:40 IST)

ஐபிஎல் ஏலம் தள்ளிவைப்பு… பிப்ரவரி மாதம் நடக்க வாய்ப்பு!

டிசம்பர் இறுதியில் நடக்க இருந்த ஐபிஎல் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான மெகா ஏலம் நடைபெற உள்ளது. டிசம்பர் இறுதியில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஏலம் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடக்க வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. ஏலம் பெங்களூருவில் நடக்க உள்ளதாகவும் அதற்கான திட்டமிடல்கள் மற்றும் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.