திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:40 IST)

எந்தந்த அணிகள் எந்தந்த வீரர்களை தக்க வைத்துள்ளார்கள்… முழு விவரம்!

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்துக்கு அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். இன்றே அதற்கு கடைசி நாள் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை வெளியாகியுள்ள வீரர்களின் தொகுப்பு.
 
  • ஆர்சிபி: விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா, தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்.
  • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கேன் வில்லியம்சன்.
  • மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.
  • டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பண்ட், அக்சர் படேல், பிரிதிவி ஷா, ஆன்ர்டி நார்ட்யே.
  • ராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன்.                                                           மற்ற இரு அணிகள் தங்கள் வீரர்களைப் பற்றிய பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.