புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (14:37 IST)

கே.எல்.ராகுலை வாங்க துடிக்கும் லக்னோ அணி! – நாளை பட்டியல் சமர்பிக்க கடைசி நாள்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் விடுவிப்பு பட்டியலை ஐபிஎல் அணிகள் வழங்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது உள்ள 8 அணிகளோடு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் பெயரில் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மூன்று இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை அணியில் வைத்துக் கொண்டு மீதமுள்ளவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி நாளை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரர்கள் பட்டியல் தயாரிப்பதில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் அணி கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலை வாங்க புதிய அணியான லக்னோ ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.