ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அபார ஆட்டம்: 300ஐ நெருங்கும் இந்தியாவின் ஸ்கோர்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் சற்று முன்வரை 72 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 93 ரன்கள் அடித்தார் என்பதும் ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்கள் அடித்து இன்னும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 94 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளது.
Edited by Mahendran