1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (17:28 IST)

குல்தீப் அணியில் இல்லையா? ஷாக்கான கங்குலி

இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. மூன்றாவது டி20 போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்குமார் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
 
முதல் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது அவர் விக்கெட் எதுவும் வீத்தவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு முன்னாள் கேப்டன் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
குல்தீப் யாதவை நீக்கியது மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது என்று கூறியுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருந்தால் இங்கிலாந்து அணி 198 ரன்கள் குவித்திருக்க வாய்ப்பில்லை. குல்தீப் யாதவ் அணியில் அணியில் இருந்து நீக்கப்பட்டது எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.