இந்திய அணியின் வெற்றிக்கு துணையாய் நின்று பல சாதனைகள் படைத்த ரோகித் சர்மா

Rohit
Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (13:35 IST)
நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாய் நின்ற ரோகித் சர்மா அதே போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்ன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.
 
நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். இவரது அதிரடி ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
 
நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியதன் மூலம் டி20 விளையாட்டில் 3வது சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ மூன்று சதம் விளாசியுள்ளார். 
 
டி20 விளையாட்டில் மூன்று சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதோடு 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன். கொஹ்லி முதலிடத்தில் உள்ளார். 
 
மேலும் மூன்று விதமான போட்டிகளிலும் மூன்று சதம் விளாசிய ஒரே வீரர் பேட்ஸ்மேன் தற்போது ரோகித் சர்மாதான்.


இதில் மேலும் படிக்கவும் :