புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (06:40 IST)

ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி சமீபத்தில் முடிவடைந்த டி-20 போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில் இன்று முதல் அடிலெய்டில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கே.எல்.ராகுல் மற்றும் முரளிவிஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதரும் வகையில் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து முரளிவிஜய் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி சற்றுமுன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹாசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.