திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (16:52 IST)

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் விஜய். சூர்யா, விக்ரம் ...

இந்தியாவில் டோலிவுட், பாலிவுட், கோலிவுட் மாலிவு, என பல 'வுட்கள்' இருக்கின்றன. இதில் நடிகர்களின் ராஜ்ஜியம் தான் கோலோச்சுகிறது.பல கோடிகள் புரளும் இந்த சினிமா துறையில் விலைவாசி உயர்வு போல நடிகர்களின் சம்பளம் கூடிக்கொண்டே போகிறது.
 
இந்நிலையில்  இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
 
இதில் பாகிவுட் நடிகர் சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ253 கோடிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளர். அதேபோல சில பாலிவுட் பிரபல நடிகர்கள் அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளனர்.
 
நம் இசைப்புயல் ஏ.ஏர்.ரஹ்மான் இவ்வருடம் ரூபாய் 66 கோடிகள் வருமானம் ஈட்டி 11 வது இடத்தில் உள்ளார்.அடுத்ததாக ரஜினிகாந்த் ரூபாய் 50 கோடிகள் வருமானம் ஈட்டி 14 வது இடத்தில் உள்ளார்.
 
இதில் விஜய் ரூ 30 கோடிகள் வருமானம் பெற்று 26 வது இடத்திலும், விக்ரம் ரூ. 26 கோடிகள் வருமானம் பெற்று 26வது இடத்திலும், சூர்யா ரூ. 23 கோடிகள் வருமானம், பெற்று 29 வது இடத்திலும் உள்ளனர்.