ரோஹித், ராகுல் அபார சதம்: முதலிடத்தை பிடித்தது இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 44வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 264 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றிக்க்கு தேவையான 265 ரன்கள் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 43.3 ஓவர்களில் எடுத்து முடித்ததால் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது
ஸ்கோர் விபரம்:
இலங்கை: 264/7 50 ஓவர்கள்
மாத்யூஸ்: 113 ரன்கள்
திரமின்னே: 53 ரன்கள்
டிசில்வா: 29 ரன்கள்
ஃபெர்னாண்டோ: 20 ரன்கள்
இந்தியா 265/3 43.3 ஓவர்கள்
கே.எல்.ராகுல்: 111 ரன்கள்
ரோஹித் சர்மா: 103 ரன்கள்
விராத் கோஹ்லி: 34
ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா