தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. இந்தியா அபார வெற்றி..!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா அபாரமாக வென்றது. இந்த போட்டி இரண்டாவது நாளிலேயே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி வெறும் 55 ரன்களுக்கு அவுட் ஆகிவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்கள் மட்டுமே தென்னாபிரிக்க அணி எடுத்தது.
இந்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணிக்கு 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய அணி சற்று முன் வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டி இரண்டு நாள் முடிவதற்கு முன்பே ஆட்டம் முடிவு பெற்றது என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran