வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:10 IST)

இந்திய அணியைச் செதுக்கியவர் இவர்தான் ! குவியும் பாராட்டுகள் !

டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு வீரர்களைப் பழக்கிய பயிற்சியாளர் டிராவிட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை  வென்ற இந்திய அணிக்கு முக.ஸ்டாலின்,  முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்திய வீரர்களுக்கு 5 கோடி வரை ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது பார் – கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய வீரர்களை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். எனவே டிவிட்டரில்ப் Brisbane Test: India steal a win: Records broken என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு வீரர்களைப் பழக்கிய பயிற்சியாளர் டிராவிட்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் ஜெண்டில்மேன் என்று அனைவராலும் அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பொறுமையும் அனுபவமும் இந்திய வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.