தினேஷ் கார்த்திக் மனைவி குளிப்பதை கமெண்ட் அடித்த ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. மேலும் வரும் ஞாயிறு அன்று இருநாடுகளுக்கு இடையே டி-20 போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு தங்கள் மனைவியையும் அழைத்து சென்றுள்ளனர். இதில் தினேஷ்கார்த்திக்கும் அவருடைய மனைவியும் ஒரு வில்லாவில் தங்கியுள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லீகல் குளிப்பது போன்ற புகைப்படத்தை ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ஹர்திக் பாண்ட்யா, இந்த நீச்சல் குளம் எங்குள்ளது என்று கமெண்ட் பாக்ஸில் கேட்டுள்ளார். அதற்கு தீபிகா நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவில் உள்ளது, நீங்கள் இங்கு வந்தால் உங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.