சென்னையில் ரகசியமாக ஒரு விஷயம் செய்த தோனி… ஆனாலும் கண்டுபிடித்த ரசிகர்கள் !
ஐபிஎல் போட்டிகளுக்காக இப்போது சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொண்டுள்ள தோனி திரையரங்கில் படம் பார்த்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.
வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார். அதற்காக கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கி பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார் தோனி.
இந்நிலையில் நேற்றிரவு அவர் டைகர் ஷ்ராப் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்த பாஹி 3 படத்தினைத் திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். இதை கவனித்த ரசிகர்கள் அவரைப் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்ற அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.