மைதானத்தில் அம்யபரிடம் கோபப்பட்ட தோனி !
கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்ற்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது முதல் டெஸ்டில் அம்பராக இருந்தவர் டெவில் ஹார்பர். அந்த மேட்சின்போது தோனிக்கும் ஹர்பருக்கும் மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஹார்பர் ஒரு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், பிரவின்குமார் பந்துவீசும் போது பிட்ச்சில் ஒரு பகுதியைக் காலால் சேதம் செய்து வந்தார். அதனால் நான் அவருக்கு எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் மீண்டும் அவர் பிட்சை சேதம் செய்யவே டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாடத் தடை விதித்தேன். இதற்கு தோனி என்னிடம் வந்து பிரவீன்குமாருக்கு இது முதல் டெஸ்ட் கொஞ்சம் இரக்கம் காட்டலாமே என கூறினார். அதற்கு நான் அவருக்கு இது முதல் டெஸ்ட்டாக இருந்தாலும் 50 ஒருநாள் போட்டிகளை விளையாடிவிட்டார் என்று கூறினேன்.
அதற்கு தோனி, உங்களிடம் எங்களுக்கே ஏற்கனவே பிரச்சனை உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் நான் ஜிம்பாவே அணிக்கு எதிராக ஆசிஸ் நெஹ்ரா பந்து வீசியபோது, இதேகாரணத்திற்காக தண்டனை அளிகக்ப்பட்டது அதை நான் தான்
கொடுத்தேன் அதை மனதில் தோனி என்னிடம் கூறியிருப்பார் என்று ஹார்பர் தெரிவித்துள்ளார்.