பிக்பேஷ் போட்டிகளில் அறிமுகமாகும் டிவில்லியர்ஸ் !
பிக்பேஷ் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் பிரிஸ்பன் ஹீட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
மிஸ்டர் 360 டிகிரி வீரர் என உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஐபில், பாகிஸ்தான் பிரிமீயர் லீக் உள்ளிட்ட சில போட்டித் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அவர் இப்போது பிக்பாஷ் லீக் போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் பங்கேற்கும் பிரிஸ்பன் ஹீட் அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமன் உறுதிப்படுத்துள்ளார்.