வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:53 IST)

உயிருக்கு போராடும் முன்னாள் நியுசிலாந்து வீரர்!

நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் இப்போது உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியுசிலாந்து அணிக்காக 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், 60 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ். இவர் மேல் மேட்ச் பிக்ஸிங் புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

ஆனால் பொருளாதார நிலை காரணமாக லாரிகள் சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது அவர் இதய பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறப்படுகிறார். இது சம்மந்தமாக நியுசிலாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.