சேப்பாக்கம் அணி அதிர்ச்சி தோல்வி: மதுரையிடம் வீழ்ந்தது!

Last Modified ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (07:30 IST)
கடந்த இரண்டு வாரங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் சேப்பாக்கம் மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சந்திரன் 39 ரன்களும், அருண் கார்த்திக் 39 ரன்களும், நிலேஷ் சுப்பிரமணியம் 31 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் சசிதேவ் 51 ரன்களும், கோபிநாத் 46 ரன்களும், ஹரிஷ்குமார் 23 ரன்களும், எடுத்தனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கிரன் ஆகாஷ் தேர்வு செய்யப்பட்டார். மதுரை அணியை சேர்ந்த இவர் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த போட்டியை அடுத்து மதுரை அணி 8 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி இரண்டாவது இடத்திலும், திண்டுக்கல் அணி முதலிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :