1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (08:07 IST)

டி.என்.பி.எல் கிரிக்கெட்.. சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி.. திருப்பூரை வீழ்த்தியது..!

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டி சேப்பாக் சூப்பர் கில்லி மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. ரஞ்சன்பால் அபாரமாக விளையாடி நான் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

இதனை அடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் எட்டு விக்கெட் இழப்பிற்கு 1242 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சேப்பாக்கம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் ஏற்கனவே இரண்டு போட்டிகளின் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்த நிலையில் அந்த அணிக்கு தற்போது முதல் வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் அந்த அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நெல்லை மற்றும் சேலம் அணிகளுக்கு இடையிலான போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva