ஹெட் அபார சதம்: ஆஸ்திரேலியாவின் மெகா ஸ்கோர்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது
இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் அவுட் ஆகிவிட்டார். இருப்பினும் அதன் பின்னர் விளையாடிய பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலியா ஸ்கோர் 467 ரன்கள் என குவிந்தது. ஹெட் மிக அபாரமாக விளையாடி 114 ரன்களும், கேப்டன் பெய்னி 79 ரன்களும், ஸ்மித் 85 ரன்களும் எடுத்தனர்
இதனை அடுத்து தற்போது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. அந்த அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும், இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதம் இருக்கையில் முதல் இன்னிங்சில் 423 ரன்கள் நியூசிலாந்து அணி பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது